உலகம்
Typography

ஆப்பிரிக்காவின் மொசாம்பிக் நாட்டின் அருகே கடலில் உருவான பலம் வாய்ந்த புயல் ஒன்று கரையைக் கடக்கவுள்ளதாகவும் இதன் போது பேரழிவு ஏற்படலாம் எனவும் முன்கூட்டியே எச்சரிக்கப் பட்டது.

இதனால் பொது மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். இடாய் என பெயரிடப் பட்டுள்ள புயல் மணிக்கு 225 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடந்துள்ளது.

மொசாம்பிக்கின் 4 ஆவது மிகப் பெரிய நகரமும் 5 இலட்சம் மக்கள் தொகை கொண்டதுமான துறைமுக நகரான பெய்ராவில் இந்தப் புயல் கடந்து சென்றது. இந்த இடாய் புயலினால் பெய்த கடும் மழை காரணமாக மொசாம்பிக் மற்றும் மலாவியில் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பெய்ராவில் 5 இலட்சம் மக்கள் மின்சாரம் இன்றியும் தகவல் தொடர்பு இன்றியும் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். போக்குவரத்தும் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

தற்போது இந்த இடாய் சைக்கிளோன் புயல் மேற்கே சிம்பாப்வே நோக்கி நகர்ந்துள்ளது. மொசாம்பிக் அரசு சார்பில் இராணுவமும், மீட்புப் படைகளும் மீட்புப் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்