உலகம்
Typography

இத்தாலியின் பெருஜியா என்னும் நகரத்திற்கு அருகேயுள்ள அமாட்ரிஸ் நகரில் இன்று அதிகாலை 3.36 மணியளவில் ஏற்பட நிலநடுக்கத்தால் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.  

அங்கு பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இத்தாலியின் தலைநகரான ரோமிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நார்சியாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அமாட்ரிஸ் நகரின் பாதி பகுதி முற்றிலும் அழிந்து விட்டது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. ரோடுகள் துண்டானதால் மற்ற பகுதிகளுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று  அமாட்ரிஸ் நகர மேயர் செர்ஜியோ பிரோஷ்ஷி தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு 6.2 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS