உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை இரவு இந்தோனேசியாவின் மையத்தில் உள்ள சுலவேசி மாகாணத்தில் 6.8 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.

இதனால் உடனே சுனாமி எச்சரிக்கை விடுவிக்கப் பட்டது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து 20 இற்கும் அதிகமான வலுவான தொடர் அதிர்வுகள் பதிவாகி உள்ளன. மேலும் சுனாமி எச்சரிக்கையால் பீதியடைந்த மக்கள் உயர்வான நிலங்களுக்கு ஓட்டமெடுத்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்பட்ட தொடர் அதிர்வுகளில் குறைந்த பட்சம் 3.4 ரிக்டரிலும் அதிகபட்சம் 5.6 ரிக்டரிலும் அதிர்வுகள் பதிவாகி உள்ளன. இந்த நில அதிர்வால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதா என்பது குறித்துத் தகவல் வெளியாகாத நிலையில், சேதங்கள் தொடர்பிலும் இன்னமும் முழுமையாகக் கணக்கிடப் படவில்லை. நிலநடுக்கம் தொடர்பான தகவலை இந்தோனேசிய வானிலை மற்றும் புவியியல் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ளது.

இதேவேளை சனிக்கிழமை இரவு 9.04 மணியளவில் இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் 2 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS செய்தி வெளியிட்டுள்ளது. 5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் இந்து சமுத்திரத்தின் மொஹென் என்ற பகுதியை அண்மித்து இந்நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்