உலகம்
Typography

உலகின் மிகப்பெரிய விமானம் இரண்டாவது சோதனை ஓட்டத்தின் போது இங்கிலாந்தில்  திடீரென தரையில் மோதி விழுந்து விபத்திற்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விமானம் டெலிபோன் கம்பத்தில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விமானம் ஆகஸ்ட் 14ம் தேதி சோதனை ஓட்டம் செய்யப்பட இருந்தது.

பிரிட்டனின் ஹை பெர்ட் ஏர் வைக்கிள்ஸ் என்ற விமான தயாரிப்பு நிறுவனம் ஏர்லான்டர் -10 என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய விமானத்தை வடிவமைத்தது. மொத்தம் நான்கு என்ஜின்கள் கொண்ட இந்த விமானம் 302 அடி நீளமும், 143 அடி அகலமும், 845 அடி உயரமும் கொண்டது. இது புறப்பட்டு செல்லும் ஓசை, இதர விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் எழுப்பும் சப்தத்தைவிட மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. மணித்தியாலத்திற்கு 92 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது இந்த விமானம்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்