உலகம்
Typography

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 2005–ம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அதில், 1,700–க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை,  வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது மாணவர்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள்  வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். இத் தாக்குதலில் 7 மாணவர்கள், 3 காவல் அதிகாரிகள், 2 பாதுகாப்பு வீரர்கள் உள்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்தத் தாக்குதலில் 35 மாணவர்கள் மற்றும் 9 போலீசார் காயமடைந்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர்  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை துப்பாக்கியால் சுட தொடங்கினர்.  இருதரப்பு இடையே பயங்கர சண்டை நிலவியது. சுமார் 10 மணி நேரங்களுக்கு மேலாக இந்த துப்பாக்கி சண்டை  நீடித்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS