உலகம்
Typography

தனது பாதுகாப்புப் படை துணைத் தலைவரான சுதிடா டித்ஜாய் என்பவரை திருமணம் முடித்திருந்த தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலங்கோன் சனிக்கிழமை தாய்லாந்து அரசராக முடி சூடி அரியாசனம் ஏறியுள்ளார்.

முன்னதாகக் கடந்த 2016 ஆமாண்டு ஆக்டோபரில் தாய்லாந்து மக்களின் பாசத்துக்கும், நேசத்துக்கும் உரிய முன்னால் மன்னரான புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக இயற்கை எய்தியிருந்தார்.

அதன் பின் அரசியலமைப்பு மன்னராகப் பொறுப்பேற்றிருந்த மகா வஜிரலங்கோன் தாய்லாந்து மக்களால் ரமா எக்ஸ் என அழைக்கப் படுகின்றார். இவருக்கு சனிக்கிழமை பௌத்தம் மற்றும் பிராமண முறைப்படி முடி சூடும் விழா கொண்டாடப் பட்டதுடன் மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மாபெரும் அணிவகுப்பு மற்றும் மரியாதை என்பன இடம்பெறும் என்றும் மன்னர் தரப்பில் அறிவிக்கப் பட்டது.

மே முதலாம் திகதி மகா வஜ்ரலங்கோன் திருமணம் செய்து கொண்ட அவரது துணைவியார் சுதிடாவை தாய்லாந்தின் அதிகாரப் பூர்வ ராணியாகவும் அவர் அறிவித்துள்ளார். வஜ்ரலங்கோனின் தந்தையின் பதவியேற்பு விழா நடந்து 69 ஆண்டுகள் கடந்து விட்டதால் புதிய மன்னரான அவரின் பதவியேற்பு விழாவைக் காண ஏராளமான தாய்லாந்து மக்கள் அரண்மணைக்கு வெளியே திரண்டிருந்தனர். இந்தப் பதவியேற்பு விழா மொத்தம் 3 நாட்கள் கொண்டாடப் படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்