உலகம்
Typography

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் லாகூர் நகரத்திலுள்ள சூஃபி புனிதத் தலம் அருகே அண்மையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்துள்ளது.

இதில் 8 பேர் பலியானதாகவும் 25 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

ரம்ஜான் நோன்பு ஆரம்பமாகி உள்ள் கட்டத்தில் நிகழ்த்தப் பட்ட இக்குண்டு வெடிப்பு தற்கொலைத் தாக்குதலா என்பது குறித்து இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை. இத்தாக்குதலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டித்துள்ளார்.

2010 இல் இது போன்று இதே தலத்தைக் குறி வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப் பட்டது. இதில் 40 பேர் பலியாகி இருந்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்