உலகம்

நாம் அண்மைக் காலமாக ஈரானை மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றோம்.

ஈரான் எமக்கு எதிராக ஏதும் நடந்து கொண்டால் நிச்சயம் அவர்கள் கடுமையாக வருத்தப் பட நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சூளுரைத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஒர்பனுடனான சந்திப்புக்கு முன்பு செய்தியாளர்களிடம் இக்கருத்தை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதன் போது டிரம்ப், நாம் ஈரானுக்கு என்ன நடக்கக் கூடும் என்பதை நிச்சயம் பார்ப்போம். அவர்கள் எமக்கு எதிராக எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அது நிச்சயம் அவர்களுக்கு ஒரு பெரிய தவறாகவே இருக்கும் என்றுள்ளார். இதேவேளை ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக அங்கு 120 000 துருப்புக்களை அனுப்ப டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியையும் டிரம்ப் மறுத்துரைத்துள்ளதுடன் அது ஒரு வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சவுதி எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதால் வளைகுடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவைச் சேர்ந்த இரு எண்னெய்க் கப்பல்கள் உட்பட 4 கப்பல்கள் தாக்கப் பட்டு சிதைக்கப் பட்டுள்ளன என்றும் இதன் பின்னணியில் முக்கிய சதி இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஈரானுடனான பதற்றம் காரணமாக வளைகுடா பகுதியில் அமெரிக்க இராணுவம் மீதான தாக்குதல்களைத் தடுக்க அந்நாடுகளுக்குத் தனது ஏவுகணை அமைப்புக்கள் மற்றும் போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகில் எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஆதாரமாக உள்ள முக்கிய ஹோர்முஸ் நீரிணைப்புப் பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரித்துள்ளதாலும், ஈரானை ஒட்டி உள்ள பகுதிகளில் அமெரிக்கா தனது போர் விமானங்களையும், கப்பல்களையும் நிறுத்தியுள்ளதாலும் இப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவுகின்றதும் நோக்கத் தக்கது.

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நிறுவப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி செயலணிகள் இரண்டினது அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் காணப்படுவதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. 

கேகாலையில் ஆரம்பமான பயிர்களை தாக்கும் மஞ்சள் புள்ளிகளைக் கொண்ட வெட்டுக்கிளிகள் மேலும் பல மாவட்டங்களுக்கு வியாபித்துள்ள நிலையில், பாலைவனத்தில் காணப்படும் வெட்டுக்கிளிகள் இலங்கைக்கு வரக்கூடிய அனர்த்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,36,657 கொரோனா பாதிப்பாளர்கள் இந்தியாவில் இன்று பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதோடு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.

இந்தியா சீனா எல்லைப்பிரச்சனை குறித்து இரு நாட்டு அதிகாரிகளுக்கிடையில் இன்று பேர்ச்சுவார்த்தை நடைபெற இருப்பதாகவும் இரு நாடுகளும் அமைதிப் பேர்ச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண சம்மதித்திருப்பதாவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கு முன்னர் அது பரவலாக கிடைப்பது சாத்தியமில்லை என ஊகிக்கப்படுகிறது.

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :