உலகம்
Typography

ஞாயிற்றுக்கிழமை தஜிகிஸ்தானின் வாக்தட் என்ற நகரிலுள்ள சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

பின்னர் இந்த மோதல் கலவரமாக உருவெடுத்தது. கலவரத்தை அடக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 32 சிறைக் கைதிகள் கொல்லப் பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வாறு கொல்லப் பட்டவர்களில் பலர் ISIS தீவிரவாதிகள் ஆவர். இது தவிர பாதுகாவலர்களும் கொல்லப் பட்டுள்ளனர். தற்போது சிறையில் கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டுள்ளது. கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகின்றது. இக்கலவரத்தைத் தூண்டியது தஜிகிஸ்தான் படைப் பிரிவின் முன்னால் தலைவராக இருந்த கல்முரட் காலிமொவ் என்பவரின் மகன் பெக்ரஸ் குல்மர்ட் என தஜிகிஸ்தான் நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தஜிகிஸ்தான் தலைநகர் அருகே அமைந்துள்ள இச்சிறையில் சுமார் 1500 இற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இச்சிறையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் ஏற்பட்ட இக்கலவரத்தில் ஆயுதமேந்திய கைதிகள் சிலரால் 3 சிறைக் காவலர்களும் 5 கைதிகளும் படுகொலை செய்யப் பட்டனர். இதைத் தொடர்ந்தே பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்தனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்