உலகம்

உலகில் அதிகளவு முஸ்லிம் சனத்தொகை கொண்ட தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியாவில் ஏப்பிரல் 17 ஆம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற்றது.

இதில் நடப்பு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் முன்னால் இராணுவத் தளபதி பிரபோவோ சுபியண்டோ ஆகியோர் போட்டியிட்டனர். செவ்வாய்க்கிழமை வெளியான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் விடோடோ 55% வீத வோட்டுக்களையும் சுபியண்டோ 44% வீத வோட்டுக்களையும் சுவீகரித்தனர்.

இதில் அதிக வோட்டுக்களைப் பெற்ற ஜோகோ விடோடோ மீண்டும் இந்தோனேசிய அதிபராகத் தேர்வாகியுள்ளார். ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத சுபியண்டோ தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் ஜகார்த்தாவில் கடும் போராட்டங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த வன்முறைகளில் சிக்கி 6 பேர் பலியானதாகவும், 200 பேர் காயமடைந்ததாகவும் உள்ளூர் ஊடகச் செய்தி தெரிவித்துள்ளது. போராட்டத்தை நிறுத்த போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.

இந்தப் போராட்டத்தை சாதகமாகப் பயன்படுத்தி குண்டுத் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய ISIS தீவிரவாதிகள் 31 பே கைது செய்யப் பட்டுள்ளதாக இந்தோனேசியப் போலிசார் தெரிவித்துள்ளனர். இதுதவிர வன்முறையில் ஈடுபட்ட 20 பேருக்கும் அதிகமான பொது மக்களும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மீண்டும் அதிபராகத் தேர்வான விடோடோவுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.