உலகம்

பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடுகளில் ஒன்றான சீனா அண்மையில் அந்நாட்டு வான் படைக்கு பல்வகைப் பயன்பாட்டுக்கு உதவும் ஜே எஃப் 17 ரக போர் விமானங்களை அளித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் இராணுவம் வலுவடையும் விதத்தில் சீனா அந்நாட்டுக்கு இராணுவத் தளவாடங்களை அளித்து வருகின்றது.

சமீபத்தில் இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களைத் தயாரித்து வழங்குவது என்று சீனா முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் இரு நாடுகளும் இணைந்து ஒரு எஞ்சின் கொண்ட ஜே எஃப் - 17 ரக் போர் விமானங்களைத் தயாரிக்கும் பணியை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து இருந்தன.

இந்நிலையில் மேம்பட்ட தொழிநுட்பங்களுடன் கூடிய ஜே எஃப் -17 ரக போர் விமானங்களை சீனா பாகிஸ்தானுக்கு அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.