உலகம்

இந்தியாவில் சமீபத்தில் வெளியான நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல் முடிவுகளின் படி அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

இதனால் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க அதிபர் டிரம்ப் உட்பட பல உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

இம்ரான் கான் தனது டுவீட்டில் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சிக்காக மோடியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் பெரும்பான்மையுடன் பாஜக முன்னிலை பெற்றதை அடுத்து நரேந்திர மோடி பாரதத்தின் பிரதமராக 2 ஆவது முறையும் பதவியேறகவுள்ளார். இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்குத் தனது பங்களிப்புத் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தவிர இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு போன்ற தலைவர்களும் மோடிக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.