உலகம்
Typography

பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோனில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.

லியோனின் மையத்திலுள்ள விக்டர் ஹியூகோ என்ற வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த வெடிகுண்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பிரெஞ்சு காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

30 வயது மதிக்கத் தக்க இந்த சந்தேக நபர் வெடிகுண்டு கொண்ட பார்சல் ஒன்றை அப்பகுதியிலுள்ள மிதி வண்டி ஒன்றில் வைத்து விட்டுச் சென்றதாக CCTV வீடியோ மூலமான ஆதாரத் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தாக்குதல் நடத்தப் பட்ட இடத்தில் பொது மக்கள் வெளியேற்றப் பட்டு பாதுகாப்புப் பலப் படுத்தப் பட்டுள்ளது. பாதுகாப்புக்காக மேலதிக இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. இத்தாக்குதலின் பின்னணியில் தீவிரவாதம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை இடம்பெறுவதாக பிரான்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிகுண்டுத் தாக்குதலை பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மேக்ரான் கண்டித்துள்ளார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS