உலகம்

சுமார் 1500 Km தூரத்துக்கு அணுவாயுதங்களை ஏந்திச் சென்று தாக்கும் வல்லமை கொண்ட கண்டம் விட்டுக் கண்டம் பாயும் சாகின் 2 என்ற ஏவுகணையை பாகிஸ்தான் இராணுவம் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதித்திருந்தது.

அரபிக் கடல் பகுதியில் இருந்து ஏவி சோதிக்கப் பட்ட இந்த ஏவுகணை பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை வெற்றி கொள்ளும் முக்கிய ஆயுதம் என்று கருதப் படுகின்றது.

இதேவேளை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான எலொன் முஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் அண்மையில் தனது ஃபால்கன் - 9 ராக்கெட்டு மூலம் 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைக் கோள்களை புளோரிடா மாகாணத்தின் கேப் கெனவெரலில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி 10.30 மணிக்க்கு விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. இந்த செய்மதிகள் அனைத்தும் உலகம் முழுதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக 'ஸ்டார் லிங்' என்ற திட்டத்தைச் செயற்படுத்தும் நோக்கில் தான் விண்ணில் ஒரே கட்டமாக ஏவப் பட்டுள்ளன.

கடந்த வாரமே திட்டமிடப் பட்டிருந்த இந்த ஏவுகை ஆனது செயற்கைக் கோள் மென்பொருள் மேம்பாட்டுப் பரிசோதனைகள் காரணமாக ஒத்தி வைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.