உலகம்

அமெரிக்காவில் இதுவரை சந்தேகத்துக்குரிய நபர்களிடம் இருந்து சமூக வலைத்தள கணக்குகள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண் போன்றவை பெறப்பட்டு வந்தன.

ஆனால் தற்போது அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிக்கும் அனைவரும் தமது ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற சமூக வலைத் தள முகவரிகளையும் வழங்க வேண்டும் என புதிய சட்டத்தை அமெரிக்கா அமுல் படுத்தியுள்ளது.

இந்த புதிய விதிக்கு ஏற்ப விசா விண்ணப் படிவம் திருத்தி அமைக்கப் பட்டுள்ளது. இதில் மேலதிகமாக குடும்ப உறுப்பினர்கள் யாராவது தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என்ற தகவல்களையும் அளிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருந்து அரச ரீதியிலாகப் பயணிப்பவர்களுக்கு மாத்திரம் விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் இந்தப் புதிய சட்டத்தினால் அங்கு குடியேற விண்ணப்பிக்கும் 7 இலட்சம் பேர் மட்டுமன்றி அங்கு பயணிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் அடங்கலாக 14 மில்லியன் பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகவுள்ளனர் என்று தெரிய வருகின்றது.