உலகம்

அண்மைக் காலமாக அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இவ்வருடத்துக்கான G20 உச்சி மாநாடு ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஜூன் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக G20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாடு இன்று சனிக்கிழமை ஜூன் 8 ஆம் திகதி இடம்பெறுகின்றது. இதில் இந்தியா சார்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்தி காந்த தாஸ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

உலகின் முக்கிய பொருளாதார வல்லரசுகள் சந்திக்கும் இந்த G20 உச்சி மாநாட்டில் முக்கிய தலைவர்களிடையேயான சந்திப்பு அதிக கவனம் பெறுகின்றது. அதிலும் அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துள்ளதால் அந்நாட்டுத் தலைவர்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இடையேயான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கருதப் படுவது குறிப்பிடத்தக்கது.