உலகம்

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள டோகன் என்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கும் புலானி என்ற பிரிவினருக்கும் இடையே அண்மைக் காலமாக இருந்து வந்த மோதல் போக்கு முற்றி திடீரென திங்கட்கிழமை இரவு இனவெறித் தாக்குதலாக மாறியுள்ளது.

இதன்போது டோகன் கிராமத்தை முற்றுகையிட்ட சிலர் குடிசைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர்.

தீயின் வெப்பம் தாங்காது வெளியே வந்த மக்களை ஒரு இனவெறிக் கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 95 பேர் பலியாகினர். இந்த இனவெறித் தாக்குதலை நடத்திய கும்பல் நிச்சயம் புலானி பிரிவினர் தான் என டோகன் கிராமத் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார். இத்தாக்குதலுக்கு உள்ளான கிராமத்தில் மொத்தம் 300 பேர் வரை இருந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்துக்கு வர வைத்து பெண்கள், குழந்தைகள் எனப் பாராது அனைவரையும் கொன்று குவித்த இனவெறியாளர்கள் கொல்லப் பட்ட அனைவரின் உடல்களையும் மொத்தமாகத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

ஆடு மாடுகளைக் கூட இவர்கள் கொன்றுள்ளனர். கொள்ளையடித்த பின் வீடுகளுக்குத் தீ வைத்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவத்துக்கு நாடு முழுதும் இருந்து கண்டனக் குரல் எழுந்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச்சில் இது போன்ற ஒரு வன்முறையில் மாலியில் 160 பேர் கொல்லப் பட்டனர். சமீப காலமாக அங்கு இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அண்மைய தாக்குதலை நேரில் பார்வையிட்ட மாலி அதிபர் இப்ராகிம் பவுபாக்கர் கெய்டா பழி வாங்கும் முயற்சிகளில் மக்கள் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.