உலகம்
Typography

நேபாள நாட்டின் ரவுத்ஹாத் மாவட்டத்தில் உள்ள கவுர் நகரில் இருந்து போக்காரா நகருக்கு நேற்று அதிகாலையில் பேருந்து ஒன்று புறப்பட்டது.

அந்த வாகனம்  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் நிலை தடுமாறிய பேருந்து, திரிசூலி ஆற்றில் விழுந்து மூழ்கியது.இந்த விபத்தில்  நீரில் மூழ்கி 21 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர்.

நேபாளத்தின் மலைப் பிரதேசங்களில் போடப்பட்டுள்ள மோசமான சாலைகளே தொடர் விபத்துகளுக்கு காரணம் என கூறப்படுகிறது. முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் தெற்கு நேபாளத்தில் மலை பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 33 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS