உலகம்
Typography

சமீபத்தில் வெளியான ஐ.நா இன் ஆய்வறிக்கை ஒன்றின் பிரகாரம் எதிர்வரும் 2027 ஆமாண்டுக்குள் இந்திய மக்கள் தொகை சீனாவை முந்தி உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முன்னேறி விடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஐ.நா அறிக்கை 'The World Population Prospects 2019' என்று அழைக்கப் படுகின்றது.

இந்த அறிக்கையில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் அதனால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் பாதிப்பு என்பன குறித்து அலசப் பட்டுள்ளது. இதில் 2050 ஆமாண்டு உலக மக்கள் தொகை 9.7 பில்லியனாக மாறி விடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் உலகளவில் 3.2% வீதத்தில் 2.5% வீதமாக ஏற்கனவே குறைந்துள்ள கருவுறுதல் சதவிகிதம் 2050 இல் 2.2% வீதமாகி விடும் என்றும் கூறப்படுகின்றது. 2050 இற்குள் அதிகரிக்கவுள்ள மக்கள் தொகையில் பாதி இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், கொங்கோ, எத்தியோப்பியா, தான்சானியா, இந்தோனேசியா, எகிப்து மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகளைச் சேர்ந்த சனத் தொகையாகும்.

அதிகளவான மக்கள் தொகை அதிகரிப்பு ஏழ்மை நாடுகளில் நிகழவுள்ளதால், இந்நாடுகளில் நிலவி வரும் வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய்கள் என்பனவும் அதிகரிக்கும் என்றும் கவலை தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இந்நாடுகளில் மக்களின் சராசரி ஆயுள் காலம் பிற நாடுகளை விட 7.4 ஆண்டுகள் குறைவாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்