உலகம்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இனிவரும் அதாவது அடுத்த 2021 முதல் 2022 வரையிலான காலப் பகுதியில் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக இந்தியா சேர்வதற்கு இந்தியாவின் கோரிக்கையை 55 நாடுகள் ஆதரித்துள்ளன.

இவ்வாறு ஆதரவு அளித்த நாடுகளில் ஆப்கானிஸ்தான், பூட்டான், இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலைத் தீவு, மியான்மார், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிரியா, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் முக்கியமானவை ஆகும்.

இந்த 2021 மற்றும் 2022 வரையிலான காலப் பகுதியில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்லாத 5 இடங்களுக்கான தேர்தல் 2020 ஜுன் மாதம் இடம்பெறுகின்றது. இந்நிலையில் பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ளமை இந்தியாவுக்கு ஒரு முக்கிய வெற்றியாக அமைந்துள்ளது. மேலும் இது குறித்து இந்தியாவின் ஐ.நாவுகான நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதின் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவுக்கு ஆதரவளித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர்களாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.