உலகம்

ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்குப் பின் தென்கொரியாவின் சியோல் நகருக்கு இரு நாள் பயணமாக சனிக்கிழமை செல்லும் டிரம்ப் அதன் பின் வடகொரிய அதிபர் கிம்மை சந்திக்க திடீர் அழைப்பை விடுத்துள்ளார்.

வட தென் கொரிய தேசங்களைப் பிரிக்கும் இராணுவம் அற்ற பகுதியில் இச்சந்திப்பை மேற்கொள்ள டிரம்ப் டுவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். வடகொரியாவுடன் அணுவாயுதங்களைக் கைவிடுதல் தொடர்பான பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கவே இந்த அழைப்பு என எதிர் பார்க்கப் படுகின்றது.

கிம் வருகை அளித்தால் இரு நிமிடங்களுக்குள் பேசிக் கொள்வோம் என ஒசாக்காவின்  ஜி20 மாநாட்டில் பத்திரிகையாளர் சந்திப்பில் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே இதே இராணுவம் விலக்கப் பட்ட பகுதிக்கு 2017 இல் செல்ல திட்டமிடப் பட்டிருந்த பயணம் மோசமான காலநிலை காரணமாக கைவிடப் பட்டது.

இறுதியாக வியட்நாமின் ஹனோய் நகரில் அமெரிக்க வடகொரிய அதிபர்கள் பங்குபற்றிய பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட பேச்சுவார்த்தை எந்தவித உறுதியான உடன்பாடுகளும் இன்றித் தோல்வியில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.