உலகம்
Typography

பாகிஸ்தானின் வடமேற்கே கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள ஹரிப்பூர் மாவட்டத்தின் தர்பேலா பகுதியில் ஆற்றில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில் பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 30 பேர் நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளனர்.

இந்தப் படகில் தோர்கார் மாவட்டத்தின் நல அமேஜை என்ற கிராமத்தைச் சேர்ந்த 80 பேர் பயணம் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் பலியானவர்களது உடல்கள் மீட்புப் படையினரால் மீட்கப் பட்டுள்ளன. விபத்துக்கான காரணமாக அதிக எடையுடன் அது பயணித்தது என்பது போலிசாரால் கூறப்படுகின்றது. மறுபுறம் புதன்கிழமை ஹோண்டுரஸ் கடற் பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விபத்துக்கான காரணம் உடனடியாகக் கண்டு பிடிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்