உலகம்
Typography

வெள்ளிக்கிழமை இரவு தெற்கு கலிபோர்னியாவில் 7.1 ரிக்டர் அளவுடைய ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கடும் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்படாத போதும் அடுத்தடுத்து தொடர் அதிர்வுகள் பதிவாகி வந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். இதே பகுதியில் இதற்கு முன்பு 20 வருடங்களுக்கு முன் 6.4 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பமே மிக சக்தி வாய்ந்ததாகும்.

கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் சான் டியாகோ வரை உணரப் பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்களும், சாலைகளும் சேதமடைந்ததுடன் ஒரு சில இடங்களில் நிலக்கீழ் எரிவாயுக் குழாய் சேதமடைந்து இரு வீடுகளில் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நிலநடுக்கம் உணரப் பட்ட போது சிபிஎஸ் செய்தி நிறுவன செய்தித் தொகுப்பாளர் மேசையின் அடியே ஒழிந்து கொண்ட சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவைத் தாக்கிய 7.1 ரிக்டர் அளவுடைய இன்னுமொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டது. இதனால் கிட்டத்தட்ட 200 000 இற்கும் அதிகமான மக்கள் டெர்னாட்டே என்ற நகரில் இருந்து அதியுயர் நிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கலாம் என இந்தோனேசிய புவியியல் ஆராய்ச்சி நிலையம் மேலும் எச்சரித்துள்ளது.

2018 இல் இந்தோனேசியாவின் பலு என்ற நகரில் தாக்கிய நிலநடுக்கத்தால் 4300 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS