உலகம்

இந்தோனேசியாவின் ஹல்மோரா தீவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.10 மணியளவில் 7.3 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் போது சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப் படவில்லை. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் தான் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி அலைகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பாரிய உயிரிழப்புக்களோ அல்லது சேதாரமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை காலை அவுஸ்திரேலியாவின் ப்ரூம் நகரின் மேற்குக் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமும் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் பைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியா வருடத்துக்கு பல நில அதிர்வுகள் பதிவாகி வரும் இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.