உலகம்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வரிவிதிப்புக்கள் காரணமாக மறைமுகமாக இடம்பெற்று வரும் வர்த்தகப் போரின் காரணமாக 1990 களுக்குப் பிறக்கு கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்குப் பின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனை அதிகாரப் பூர்வ புள்ளி விபரங்கள் உறுதிப் படுத்தியுள்ளன. அதாவது இரண்டாவது காலாண்டில் சீனப் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைந்த வேகத்திலுள்ளது.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் சீனாவின் வணிக நலன்கள் மாற்றும் வளர்ச்சியைப் பாதித்து வருகின்றது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 6.4% வீதமாக இருந்த சீனப் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த காலாண்டில் 6.2% ஆகக் குறைந்துள்ளது. ஆயினும் சீனா வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வ GDP எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளி விபரத்தின் நம்பகத் தன்மை கேள்விக்குறியது என சீனாவினை உற்றுக் கவனித்து வருபவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வேறு சில தரவுகளோ சீனாவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் தெரிவிக்கின்றன. உலக வர்த்தகப் போர் மட்டுமல்லாது சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைவடைவதும் உலகப் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.