உலகம்
Typography

சீனாவில் தயாரிக்கப் பட்ட ஓட்டுனர் இன்றி இயங்கக் கூடிய தானியங்கிப் பேரூந்து ஒன்றின் முதல் சோதனை ஓட்டம் கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டுள்ளது.

சுமார் 32 மீட்டர் நீளம் கொண்ட இந்த அதிவிரைவு தானியங்கி பேரூந்து 2022 ஆமாண்டு கட்டார் நாட்டில் நடைபெறவுள்ள ஃபிபா உலகக் கிண்ணக் காற்பந்து போட்டியின் போது பயன்படுத்தப் படும் எனத் தெரிய வருகின்றது.

மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கக் கூடிய இந்தத் தானியங்கி பேரூந்தில் ஒரே நேரத்தில் 307 பயணிகள் வரை பயணிக்கலாம். இந்த பேரூந்தானது சென்சார்கள் உதவியுடன் பேரூந்து சாலையின் அளவைக் கணக்கிட்டு அதற்கேற்ற விதத்தில் பயணிக்கக் கூடிய கணணி மென்பொருள் உதவியுடன் இயங்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்