உலகம்
Typography

ஜப்பானின் ஹோன்சு தீவிலுள்ள கியோட்டோ என்ற நகரில் அமைந்துள்ள 3 தளங்களுடன் கூடிய மிகப் பெரிய கட்டட அமைப்பைக் கொண்ட கியோட்டோ அனிமேஷன் ஸ்டூடியோவில் இரு தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக அச்சம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

காலை 10:30 மணிக்கு தீப்பிடித்த போது அங்கு 70 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். சற்று நேரத்தில் தீ மளமளவென ஸ்டூடியோ முழுவதும் பரவியது. துரிதமாக செயற்பட்ட தீயணைப்பு வீரர்களின் அயராத முயற்சியால் தீ சில மணி நேரங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பட்டது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்க நிலையில் இருந்த 35 பேர் பத்திரமாக மீட்கப் பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்தத் தீ விபத்து ஏற்பட்டதற்கான தெளிவான காரணம் இன்னமும் தெரிய வரவில்லை.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்