உலகம்
Typography

ஜூலை 18 ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ப்லோரல் பார்க் பகுதியில் இந்து மத குருவான ஹரிஸ் சந்தர் புரி என்பவர் வீதியில் நடந்து கொண்டிருந்த போது 52 வயது மதிக்கத்தக்க இன்னொரு நபரால் அவர் கடுமையாகத் தாக்கப் பட்டுள்ளார்.

இதில் அவரது முகம் உட்பட உடல் முழுவதும் கடுமையான காயங்கள் மற்றும் சிராய்ப்புக்கள் என்பவை ஏற்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல் அளித்த இந்து மத குரு தான் மிகவும் மோசமாகத் தாக்கப் பட்டதாகவும், உடனே வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டதாகவும், தான் வேதனையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலில் தொடர்புடைய சேர்கியோ கௌவெயா என்பவரைப் போலிசார் கைது செய்துள்ளனர். அவர் மீது குற்றவியல் விசாரணை தற்போது நடத்தப் பட்டு வருகின்றது.

சமீபத்தில் டிரம்பின் கோ பேக் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பெண்கள் எந்த நாட்டில் இருந்து வந்தார்களோ அங்கேயே திரும்பிச் செல்ல வேண்டும் என்ற டுவீட்டானது கடும் விமரிசனத்துக்கு உள்ளானது. இந்த டுவீட்டை அடுத்து நியூயோர்க்கில் இந்து மத குரு மீது தாக்குதல் நடத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்