உலகம்
Typography

யேமெனில் துறைமுக நகரமான ஏடனில் அரச படைகளுடன் புரட்சிப் படையினர் உச்சக் கட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற மோதலில் 40 இற்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்ததுடன் 260 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக யேமெனில் வளைகுடா நாடுகளுடன் ஹௌத்தி புரட்சிப் படையினர் மேற்கொண்டு வரும் மோதலில் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

முக்கியமாக ஹௌத்திக்களின் வசம் இருக்கும் தலைநகர் சனாவின் சில பகுதிகளிலும், துறைமுக நகரான ஏடனிலும் கடும் மோதல் இடம்பெற்று வருகின்றது. புரட்சிப் படைக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் யேமென் இராணுவத்துக்கு வான் வழியாகவும், தரை வழியாகவும் சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகள் உதவி வருகின்றன.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் யேமெனில் இடம்பெற்ற உச்சக் கட்ட தாக்குதல்களில் இரு தரப்பிலும் 40 இற்கும் அதிகமான போராளிகளும், பொது மக்களும் உயிரிழந்துள்ளனர். இதனை உள்நாட்டு ஊடகங்களும், ஐ.நா கண்காணிப்பு முகாமை அமைப்பும் உறுதிப் படுத்தியுள்ளன. தாக்குதல்களில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப் படுகின்றது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்