உலகம்
Typography

ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் கடந்த பல வருடங்களில் இல்லாதளவுக்கு நியாயமான தேர்தலை வலியுறுத்தி கிட்டத்தட்ட 50 000 பொது மக்கள் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கு பற்றியுள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நகர உள்ளாட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் முக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களில் குளறுபடிகள் இருப்பதாகக் காரணம் காட்டி அவர்களுக்குத் தேர்தால் அதிகாரிகள் தடை விதித்தனர். இம்முடிவைத் திரும்பப் பெறக் கோரியும் தேர்தலில் குறித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போட்டியிட அனுமதிப்பதன் மூலம் நியாயமான தேர்தலை நடத்தக் கோரியும் கடந்த ஜூலை 21 ஆம் திகதி சுமார் 22 000 பேர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது 1400 பேரைப் போலிசார் கைது செய்து அவர்கள் மீது அடக்குமுறையைப் பிரயோகித்தனர்.

2011-2012 ஆமாண்டுக்குப் பின் ரஷ்யாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் இதுவாகும். தற்போது இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் குறைந்தது 50 000 பேர் வரை சேர்ந்துள்ளனர். இந்தப் பேரணியின் மத்தியில் மாஸ்கோ அரசு தடை செய்த போதும் பிரபலமான பாடகர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலிசார் ரகசியமாக எதிர்க்கட்சி ஆர்வலர் லியுபோவ் சோபோலின் அலுவலகத்துக்குச் சென்று விசாரணை நிமித்தம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதனைத் தனது டுவிட்டர் செய்தியின் மூலம் உறுதிப் படுத்திய அவர் தன்னால் போராட்டத்துக்கு வர இயலாது போனாலும் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும், ரஷ்யா சுதந்திரமாக இருக்கும்! எனவும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ ஆர்ப்பாட்டத்தில் இன்றும் 8 பேர் கைது செய்யப் பட்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்