உலகம்

அண்மையில் ரஷ்யாவின் கிரிமியா பகுதிக்கு 226 பயணிகளுடனும் 7 ஊழியர்களுடனும் புறப்பட்ட யூரல் ஏர்பஸ் 312 என்ற விமானம் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்துக்குள்ளேயே பறவைகள் கூட்டம் எஞ்சினில் மோதி ஆபத்தை எதிர்நோக்கியது.

விமானத்தின் கீழ் பகுதியில் இலேசான தீ விபத்துன் ஏற்பட்டதை அடுத்து அதை அவசரமாகத் தரை இறக்கா விட்டால் அது விபத்தில் சிக்கும் என்பதை உணர்ந்த விமானி அருகே விமான நிலையம் எதுவும் இல்லாததால் சாதுரியமாக சோளக்காட்டில் பத்திரமாக அதனை இறக்கியுள்ளார்.

இதனால் இவ்விமானத்தில் பயணித்த 233 பேரின் உயிரும் பாதுகாக்கப் பட்டது.
இவர்கள் அனைவரும் 41 வயதான குறித்த விமானி டாமிர் யுசுபோவ் இனைக் கட்டி அணைத்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளனர். சமூக வலைத் தளங்களில் விரைவில் இவர் ஹீரோவானார்.

இந்த ஹீரோவுக்கும் சக விமானியான ஜியார்ஜி முர்ஸினுக்கும் தற்போது ரஷ்ய அரசு வீர தீர சாகசச் செயல்களைச் செய்த அந்நாட்டின் வீரர்களுக்கு வழங்கப் படும் உயரிய விருதான ஹீரோ ஆஃப் ரஷ்யா என்ற விருதை அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் விமான ஊழியர்களுக்கும் தைரியத்துக்கான விருது அறிவிக்கப் பட்டுள்ளது.