உலகம்

ஆப்கானிஸ்தானில் இருந்து விரைவில் தனது அனைத்துப் படைகளையும் வாபஸ் பெறவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா ரூ 12.5 கோடி நிதியுதவியைக் கூடுதலாக வழங்கியுள்ளது.

தலிபான்களுடன் தொடர் உள்நாட்டுப் போரினால் மிகவும் நலிவடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அவ்வப்போது பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் எதிர்நோக்கி வருகின்றது.

இந்நிலையில் ஆப்கானில் போர் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப் பட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவர்கள் என அனைவரது நலனுக்கானவும் இந்த நிதியுதவி பயன்படுத்தப் படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ஐ.நா சார்பாக ஒரு சர்வதேச நிதியுதவி கோரிக்கை முன் வைக்கப் பட்டது. இதற்குப் பங்களிக்குமாறும் அமெரிக்கா சர்வதேசத்துக்கு வலியுறுத்தியுள்ளதுடன் இதுவரை 27% வீத நிதி மாத்திரமே இதன் போது திரட்டப் பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.