உலகம்

உலகின் முக்கிய மழைக் காடும் பூமியின் நுரையீரல் என்று அழைக்கப் படுவதுமான அமேசானில் கடந்த சில நாட்களாகப் பற்றி எரிந்து வரும் காட்டுத் தீயினால் இயற்கை ஆவலர்கள் பெரிதும் கவலை கொண்டுள்ள நிலையில் பொலிவியா அரசு இந்தக் காட்டுத் தீயினைக் கட்டுப் படுத்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

உலக ஆக்ஸிஜன் உற்பத்தியில் 20% வீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமேசான் காடுகளில் கடந்த சில நாட்களாக காட்டுத் தீ உக்கிரமாகப் பரவி வருவதனால் சுமார் 16 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காடு இதுவரை அழிந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அழிவை ஈடுகட்ட இன்னமும் 100 வருடங்கள் வரை ஆகலாம் எனவும் கணிக்கப் பட்டுள்ளது. காடழிப்பால் வளிமண்டல மாசும் அதிகம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் காட்டுத் தீயினை விரைவாகக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வர விமானம் மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பொலிவிய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்தக் காட்டுத் தீ ஏற்படக் காரணம் பிரேசிலின் விவசாயிகள் மற்றும் அரசியல்வாதிகள் தான் என உலக அரங்கில் குற்றச்சாட்டு முன் வைக்கப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சுமார் 9 நாடுகளை உள்ளடக்கி பரந்துள்ள பசுமையான மழைக்காடான அமேசன் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. லத்தீன் அமெரிக்காவின் 40% சதவீத நிலப் பரப்பையும் இந்தக் காடு கொண்டுள்ளது.

சுமார் 420 பழங்குடி மக்கள் வாழும் இந்த அமேசன் காட்டில் 86 விதமான மொழிகளைப் பேசும் இந்தியப் பழங்குடியினரும் அடங்குவர். உலகில் அறியப்பட்ட பத்தில் ஒரு உயிரினம் அமேசான் மழைக்காடுகளில் உள்ளது. சுமார் 30,000 வகையான செடிகள், 2,500 வகையான மீன்கள், 1,500 பறவைகள், 500 பாலூட்டிகள், 550 ஊர்வன மற்றும் 2.5 மில்லியன் பூச்சிகள் இருப்பதாக ACTO (Amazon Cooperation Treaty Organization) அமைப்பு கூறுவதும் குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இத்தாலி ஜெனோவா நெடுஞ்சாலையில், 2018 ஆகஸ்ட் 14 ம் ஆண்டு இடிந்து விழுந்த "மொராண்டி பாலம்" 43 உயர்களை காவு கொண்டிருந்தது.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.