உலகம்
Typography

விரைவில் அதாவது இன்னும் 2 மாதங்களில் இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான போர் மூளும் என பாகிஸ்தான் மத்திய ரயில்வே அமைச்சர் சேக் ரஷீத் அகமது பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளார்.

அண்மையில் காஷ்மீருக்கு வழங்கப் பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததை அடுத்து பாகிஸ்தான் கடும் அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளது.

ஆனால் பெரும்பாலான சர்வதேச நாடுகள் இவ்விவகாரத்தில் இந்தியா பக்கம் உள்ளன. ஆனால் அண்மையில் காஷ்மீர் நிலை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக் காட்சியில் உரையாற்றிய போது இவ்விவகாரத்தில் பாகிஸ்தான் எந்த எல்லை வரைக்கும் செல்லத் தயார் என்று தெரிவித்திருந்தார். இதன் அடுத்த கட்டமாக மத்திய ரயில்வே அமைச்சர் அண்மையில் ஆற்றிய உரையில் இவ்வாறு கூறியுள்ளார். 'காஷ்மீரின் இறுதி சுதந்திர போராட்டத்துக்கான நேரம் வந்து விட்டது. இந்தியாவுடனான இந்த உடனடி யுத்தம் கடைசியாக இருக்கும். காட்டுமிராண்டித் தனம் மற்றும் பாசிசம் மோடி ஆட்சியில் கட்டவிழ்க்க படுகின்றது. காஷ்மீர் அழிவின் விளிம்பில் உள்ளது. இவ்விடயத்தில் ஏனைய முஸ்லிம் தேசங்கள் ஏன் அமைதியாக உள்ளன என்று புரியவில்லை.

காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதில் ஐ.நா சபை நடுநிலை இழந்து விட்டது. பாதுகாப்புச் சபையில் அவர்கள் இது தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்தியிருக்க வேண்டும்! ஆனால் செய்யவில்லை. செப்டம்பரில் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் இப்பிரச்சினையை ஐ.நா பொதுச் சபைக்குக் கொண்டு செல்வார். சீனா மட்டுமே எமக்கு நட்பு நாடாகத் தோள் கொடுத்து நிற்கின்றது!' என்றுள்ளார்.

இதேவேளை போருக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் முகமாக பாகிஸ்தான் இராணுவம் நள்ளிரவில் ஏவுகணைகளை வீசிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்