உலகம்
Typography

பிரெக்ஸிட் விவகாரம் காரணமாக பிரிட்டன் நாடாளுமன்றத்தை ஆக்டோபர் 14 ஆம் திகதி வரை முடக்கி வைக்க பிரதமர் போரிஸ் ஜான்சனின் உத்தரவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் நோக்கத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகக் கோரும் பிரெக்ஸிட் மசோதா கடந்த சில வருடங்களாக நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறத் தாக்கல் செய்யப் பட்டு பல முறை ஓட்டெடுப்பு நடைபெற்ர போதும் அதில் இணக்கம் பெறப்படவில்லை. முன்னால் பிரதமர் தெரெசா மே அரசு இதில் தோல்வியடைந்ததால் கடந்த மே மாதம் தன் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்திருந்தார்.

இதன் பின் பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். இந்த பிரெக்ஸிட் விவகாரத்தில் இவரின் அரசுக்கும் கெடு விதிக்கப் பட்டதால் அதுவரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்க ஒப்புதல் தருமாறு ராணி எலிசபெத் இடம் போரிஸ் ஜான்சன் விண்ணப்பித்தார். இதற்கு ராணி அனுமதி அளித்துள்ள போதும் பிரதமரது இந்த முடிவுக்குப் பல எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 400 ஆண்டுகளில் இல்லாதளவு பிரிட்டன் நாடாளுமன்றம் நீண்ட காலம் முடக்கப் படுவது இதுவே முதன்முறையாகும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்