உலகம்
Typography

ஹாங்கொங் இற்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்து அதனைத் தன்னுடன் இணைக்கும் சீனாவின் முனைப்புக்கு எதிராக ஹாங்காங்கில் கடந்த பல ஆண்டுகளாக அவ்வப்போது இலட்சக் கணக்கான மக்கள் பங்கேற்கும் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடைபெற்று வந்துள்ளன.

1997 இல் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு சீனாவுடன் ஹாங்கொங் இணைந்தாலும் அங்கு தன்னாட்சி, தனி சட்டம், பட்ஜெட் மற்றும் பாதுகாப்புடன் இயங்கும் சிறப்பு அதிகாரம் இன்னமும் தொடர்ந்து இருந்து வருகின்றது.

இந்நிலையில் அண்மையில் ஹாங்கொங்கில் நடந்துவந்த தொடர் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் அங்குள்ள கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் திட்ட மசோதாவை ஹாங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம் திரும்பப் பெறத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹாங்கொங்கில் கடந்த 3 மாதமாக இந்த சட்ட மசோதாவை ரத்து செய்யவும், கேரி லாம் பதவி விலகக் கோரியும் பொது மக்கள் தொடர்ச்சியாக பல இலட்சக் கணக்கில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் ஹாங்கொங்கின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பித்தது.

போராட்டக் காரர்களை கட்டுப் படுத்த முடியாது சீன இராணுவமும், ஹாங்கொங் காவல் துறையும் திணறி வருகின்றனர். இதனையடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் கைதிகளை நாடு கடத்தும் மசோதாவை நிரந்தரமாகத் திரும்பப் பெற கேரி லாம் முடிவெடுத்துள்ளதாகவும் இதனை அவர் விரைவில் அதிகாரப் பூர்வமாக அறிவிப்பார் என்றும் நம்பத் தகுந்த தகவல் வெளியாகி உள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்