உலகம்
Typography

செவ்வாய்க்கிழமை இலண்டனிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய பாகிஸ்தானிய ஆதரவாளர்களது செயலால் தூதரக வளாகத்தில் சேதம் ஏற்பட்டது.

இச்சம்பவம் வருத்தமளிப்பதாக இலண்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டோமினிக் ராப் கருத்துத் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக் காரர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.

தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் குறித்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இப்போராட்டம் தொடர்பான தகவல்களையும் வீடியோ பதிவையும் இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. இந்த வன்முறையினைக் கண்டித்த இலண்டன் மேயர் இவ்விடயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இந்த நாசகாரச் செயலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் மீது நடத்தப் படும் எந்தவித வன்முறைகளையும் ஏற்றுக் கொள்ள முடியாது என இலண்டன் நாடாளுமன்ற வடமேற்கு கேம்ப்ரிட்ஜ் தொகுதி உறுப்பினர் ஷைலேஷ் வாரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலண்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமுக பேச்சுவார்த்தை நடந்து நம்பிக்கை ஏற்படுத்தப் பட வேண்டும் என்று வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்