உலகம்

உச்சக் கட்ட 5 ஆம் நிலைப் புயலான டோரியன் அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 24 ஆம் திகதி உருப்பெற்று கரீபியன் தீவுக் கூட்டங்களான பஹாமஸ் தீவுகளை மையம் கொண்டு தாக்கியது.

முக்கியமாக எல்போ கே மற்றும் கிராண்ட் பஹாமா ஆகிய கடற்கரை நகரங்களில் கரையைக் கடந்தது. இதன்போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதுடன் கனமழையும் கொட்டியது.

இதில் வாகனங்கள், படகுகள், கண்டெய்னர்கள் மற்றும் வீடுகளின் மேற்கூரைகள் என்பன கடும் சேதம் அடைந்தன. இதில் பலியானவர்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. பஹாமஸ் தீவுக் கூட்டங்களின் பல பகுதிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடல் நீரும் உள்ளே புகுந்துள்ளது.

இதனால் மீட்புப் பணிகள் கடினம் அடைந்துள்ளதுடன் பொது மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர். வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு போர்க் கால அடிப்படையில் உடனடி நிவாரணம் அளிக்கப் பட்டு மீட்புப் பணிகளும் இடம்பெறும் என பஹாமஸ் பிரதமர் ஹியூபர்ட் மின்னஸ் தெரிவித்துள்ளார்.