உலகம்

பூமியின் இதயமான அமேசான் காடுகளைக் காப்பாற்ற 7 தென் அமெரிக்க நாடுகள் கூட்டு ஒப்பாந்தம் மேற்கொண்டுள்ளன. உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டலக் காடு அமேசான் ஆகும்.இங்கு கடந்த சில ஆண்டுகளாகக் காட்டுத்தீ சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ளன. அதிகபட்சமாக இந்த ஆண்டு 80 000 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகில் ஆக்ஸிஜன் உற்பத்தியில் அதிக பங்கேற்று பூமியின் இதயமாக உள்ள இந்தக் காட்டினைக் காப்பாற்ற கொலம்பிய அதிபர் இவான் துக் தலைமையில் லெட்டிசியா நகரில் 7 தென்னமெரிக்க நாடுகள் பங்கேற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக்குவாடர், கயானா, பெரு மற்றும் சுரிநாம் ஆகிய நாடுகள் பங்கேற்றன.

இந்த மாநாட்டில் அமேசான் காடுகள் காட்டுத்தீயில் இருந்து காப்பாற்றவும், ஏற்கனவே காட்டுத்தீயால் கருகிப் போன பகுதிகளில் புதிய காடுகளை உருவாக்கவும் ஒப்பந்தம் எட்டப் பட்டது. இதில் அமேசான் ஆற்றுப் படுக்கைகளைப் பாதுகாக்கவும், செயற்கைக் கோள் மூலம் கண்காணிக்கவும், உள்ளூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்றும் முடிவெடுக்கப் பட்டது.

60% வீதமான அமேசான் காட்டுப் பகுதி அமைந்துள்ள பிரேசிலில் அதன் அதிபர் பல்சனாரோ வனங்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இந்நிலையில் அவர் இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளாது காணொளி வாயிலாகவே கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கையின் 14வது பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 09.28 மணிக்கு) பதவியேற்றார். 

நேற்றிரவு துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்திறங்கிய ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று விழுந்து விபத்துகுள்ளானது.

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

மொரீஷியஸ் தீவுக்கடலில் விபத்திற்குள்ளான கப்பல் ஒன்றிருந்து கடலில் எண்ணெய் கசியத் தொடங்கியதை அடுத்து அந்நாடு அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.