உலகம்

பஹாமஸ் இல் கோர தாண்டவம் ஆடிய டோரியன் புயல் அமெரிக்காவின் வடக்கு கரோலினா, ஜோர்ஜியா மற்றும் கனடாவில் கரையைக் கடந்துள்ளது. பஹாமஸில் கடும் சேதத்தை ஏற்படுத்திய இப்புயல் மணிக்கு 220 km வேகத்தில் வீசியதுடன் மட்டுமல்லாது 20 அடி உயரத்துக்குக் கடல் அலைகளும் எழுந்துள்ளன.

மிகவும் சக்தி வாய்ந்த இப்புயலினால் 43 பேர் உயிரிழந்ததுடன் 13 000 இற்கும் மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியும் உள்ளன. அதிகபட்ச 5 ஆம் வகைப் புயலாக பஹாமஸைத் தாக்கிய இப்புயல் கரோலினாவில் 1 ஆம் வகைப் புயலாகவும், கனடாவில் 2 ஆம் வகைப் புயலாகவும் கரையைக் கடந்துள்ளது.

மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப் பட்டிருப்பதால் சுமார் 5 இலட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆனால் முன்னேற்பாடுகள் காரணமாக இப்பகுதிகளில் உயிரிழப்புக்கள் அதிகம் தவிர்க்கப் பட்டுள்ளன.மேலும் சீரமைப்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் துரிதமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.