உலகம்
Typography

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தப் பரிவர்த்தனைகளில் பெரும் குழப்பங்கள் நிலவிவருகின்றன.

குறிப்பாக இக் குழுப்பங்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது, பரஸ்பரம் இருநாடுகளிலும் இறக்குமதியாகும் பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிப்பது என்பது தொடர்பில் இருநாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகாததே முக்கிய காரணமாகும். தமது நாடுகளில் இறக்குமதியாகும் பொருட்கள் மீது கட்டற்ற விகிதங்களில் இரு நாடுகளும் வரிவிதிப்புச் செய்து வந்தன.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களுக்கு முதல் முறையாகச் சீனா வரிவிதிவிலக்கு அளித்துள்ளது. எதிர்வரும் 17ந் திகதி அமுலுக்கு வரும் இவ் வரிவிலக்கு ஒராண்டுக்கு காலத்திற்கு நடைமுறப்படுத்தப்படும் எனவும், இது திருப்தியுற அமையுமெனில், மேலும் சில பொருட்களுக்கும் வரிவிலக்களிக்க ஆலோசிப்பதாகவும் அறிவித்தது.

இது இவ்வாறிருக்க, அமெரிக்க தரப்பில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் சிலவற்றுக்கு 25 முதல் 30 சதவீதம் வரையிலான வரி எதிர்வரும் அக்டோபர் முதல் உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆயினும் தற்போது, அக்டோபர் ஒன்றில் சீனாவின் 70வது தேசிய தினம் கொண்டாடப்படுவதால், அக்டோபர் 15 ஆம் திகதி முதல் இவ் வரிவிதிப்பு நடைமுறைக்கு வருமென தெரிவித்த அமெரிக்க அதிபர், சீனாவின் துணைப் பிரதமர் லியு ஹீவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஒரு நல்லெண்ண நடவடிக்கை இதுவெனவும் தெரிவித்துள்ளார்.

வெகு விரைவில் அமெரிக்க சீனப் பிரதிநிதிகள் வாஷிங்டனில் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்நடவடிக்கைகள் இரு நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்