உலகம்

பாகிஸ்தான் மீது அண்மையில் அமெரிக்கா தொடுத்த தாக்குதலில் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப் பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப் படுத்தியுள்ளார்.

இதற்கு முன்பும் அமெரிக்காவின் தாக்குதலில் ஹம்சா கொல்லப் பட்டதாக பல யூகங்கள் கிளம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இம்முறை ஆப்கான் பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் வான் வழித் தாக்குதலில் ஹம்சா கொல்லப் பட்டதை முதன் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப் படுத்தியுள்ளார். ஹம்சா பின்லேடன் கொல்லப் பட்டமையானது அல்கொய்தா இயக்கத்தின் முக்கிய தலைமைத்துவம் மற்றும் தீவிரவாதக் குழுவின் செயற்பாட்டு நடவடிக்கைகளைக் குறைக்கும் விதத்தில் ஒரு முக்கிய இழப்பாக இருக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒசாமா பின்லேடனின் 20 குழந்தைகளில் 15 ஆவது குழந்தையும், அவரது 3 ஆவது மனைவி ஹம்சாவின் மகனுமாவார் இந்த 30 வயதாகும் ஹம்சா பின்லேடன். கடந்த பெப்ரவரியில் ஹம்சாவின் தலைக்கு 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அமெரிக்கா அறிவித்திருந்தது. 2011 இல் அல்கொய்தா தலைவரும் செப்டம்பர் 11 தாக்குதல் சூத்திரதாரியுமான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் வைத்து அமெரிக்க நேவி சீல்ஸ் படைகளால் சுற்றி வளைக்கப் பட்டு கொல்லப் பட்டார்.

இதன் பின் அல்கொய்தா இயக்கத்தின் வலிமையான தலைவராக ஹம்சா பின்லேடன் வளர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை தலிபான்களுடனான பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் ரஷ்யப் பிரதிநிதிகளுடன் அண்மையில் தலிபான் போராளிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“மதகுருமாரையும், அடிப்படைவாதிகளையும், தீவிரவாதிகளையும் இணைத்துக் கொண்டு அரசியலமைப்பினைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை நாம் மறந்து செயற்படக் கூடாது.” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கான பிரதிநிதிகளின் சிபார்சுகளை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார். 

இந்திய மத்திய மந்திரிசபை நவம்பர் மாதம் வரை ஏழைமக்களுக்கு இலவச அரிசி மற்றும் பருப்பு வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் போலீசார் விசாரணையில் உயிரிழந்த தந்தை-மகன் சம்பவத்தையடுத்து தமிழ்நாட்டில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கு அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரசின் கடும் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்றான இத்தாலியில், தலையொட்டிப்பிறந்த இரட்டையர்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்து, மருத்துவ உலகில் மகத்தான சாதனை புரிந்துள்ளார்கள் இத்தாலிய மருத்துவர்கள்.

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.