உலகம்

அண்மையில் சவுதியின் ஆரம்கோ நிறுவன கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது நடத்தப் பட்ட டிரோன் தாக்குதலால் உலகளவில் எண்ணெய் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டது.

இத்தாக்குதலை யேமெனின் ஹௌத்தி கிளர்ச்சியாளர்கள் தான் மேற்கொண்டதாகப் பரவலாகக் கருதப் பட்டாலும் இதன் பின்னணியில் ஈரானின் ஆதிக்கம் இருந்திருக்கும் என்றும் சந்தேகிக்கப் படுகின்றது.

இதனால் ஈரானில் இருந்து இத்தாக்குதல் நடைபெற்றிருந்தது ஊர்ஜிதமானால் இதனைப் போர் பிரகடனத்தின் ஒரு பகுதியாகத் தான் கருத முடியும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்நிலையில் சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பைப் பலப்படுத்த இராணுவ வீரர்களை அனுப்பி வைக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதனைத் தற்காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதி என அமெரிக்க இராணுவ மந்திரி மார்க் எஸ்பர் உறுதிப் படுத்தியுள்ளார். இது குறித்து பெண்டகனில் வைத்து நிருபர்களிடம் இவர் தகவல் தருகையில், 'வான் தாக்குதல் மற்றும் ஏவுகணைகளைத் தடுத்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைக்காகத் தான் அமெரிக்கப் படைகள் சவுதிக்கு அனுப்பி வைக்கப் படுகின்றனர்' என்றுள்ளார்.

இதேவேளை சவுதிக்குச் செல்லவிருக்கும் அமெரிக்கப் படை வீரர்களின் எண்ணிக்கை அல்லது அவர்கள் எப்போது புறப்படுகின்றனர் போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.