உலகம்
Typography

டெல்லியில் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது என்று கூறினார். 

டெல்லியில் ஐஐடி வளாகத்தில் உரை நிகழ்த்த வந்திருந்தார் ஜான் கெர்ரி. டெல்லியில் இப்போது கடுமையான மழை பெய்துக்கொண்டு  இருப்பதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தார் ஜான் கெர்ரி என்று கூறப்படுகிறது. பின்னர் ஐஐடி வளாகம் வந்த ஜான் கெர்ரி தாம் இங்கு காரில் வந்திருக்கக் கூடாது என்றும், படகில் வந்திருக்க வேண்டும் என்றும் நகைச்சுவையாகக் கூறினார்.

பின்னர் உரை நிகழ்த்திய அவர், அமெரிக்காவும், இந்தியாவும் தீவிரவாதத்துக்கு எதிராக இணைந்து செயல்படும் என்றும், இரு நாடுகளுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல் பெரும் சவாலாக உள்ளது என்றும் கூறினார். இந்தியா மிகப்பெரிய வணிகச் சந்தையாக உருமாறி வருகிறது என்றும், வணிக வளம் நிறைந்த நாடு இந்தியா என்றும் கூறினார். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு ஆதரவாகவே அமெரிக்கா இருக்கும் என்றும் ஜான் கெர்ரி கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS