உலகம்

ஹாங்காங்கில், பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் முகத்தினை மறைக்கும், கவசங்களை அல்லது முகமூடிகளை அணிவதற்கு தடைவிதிதக்கப்பட்டுள்ளது.

ஒரு மாத காலமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நடத்திவரும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில், அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி. ஹாங்காங்கின் தலைவர் இந்த அறிவிப்பினைச் செய்துள்ளதாகத் தெரிய வருகிறது.

அமைச்சரவைச் செயற்குழுவின் சிறப்புக் கூட்டத்தைத் தொடர்ந்து , நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த தடையுத்தரவினை, தலைவர் கேரி லாம் அறிவித்தார். முகம் மறைக்கும் நடைமுறைகளை தடைசெய்வதற்கான உத்தரவு, தீவிரமான பொது ஆபத்திலிருக்கும் சூழ்நிலையில், வன்முறையைத் தடுத்து, சமுதாயத்திற்கு அமைதியை சீக்கிரம் மீட்டெடுப்பதற்கும், நாட்டின் அமைதிக்கும், அவசியமான முடிவு என லாம் கூறினார். முகமூடி அணிந்த எதிர்ப்பாளர்கள் மற்றும் கலகக்காரர்களுக்கு எதிராக ஒரு தடுப்பு விளைவை இந்தத் தடையுத்தரவு உருவாக்கும் என நம்புவதாகவும், முகமூடி எதிர்ப்பு சட்டத்தினை நீங்குவதற்கான காலவரையறை எதுவும் நிர்ணயிக்கபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அங்கு நடைபெற்ற ஜனநாயக சார்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான மக்கள், காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் அல்லது குறிவைக்கப்படலாம் என்ற அச்சத்தில்தங்கள் அடையாளத்தை மறைக்க முகமூடிகளை அணிந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.