உலகம்

மக்கள் முகத்தை மறைக்கும் முகமூடிகள், கவசங்கள் அணிந்து போராட்டம் நடத்துவதற்கு விதிக்கபட்ட தடையுத்தரவினால் ஹாங்காங்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

சென்ற 5ந் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தினால் கோபமுற்ற மக்கள், போர்க்கோலம் பூண்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைகளை விட்டு விட்டு போராட்ட களத்தில் குதித்தனர். இதனால் பல இடங்களிலும், வன்முறை வெடித்தது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சாலைகளில் தடைகளை ஏற்படுத்தினர். கடைகளை அடித்து நொறுக்கினர். போலீசாரை தாக்கினர். மெட்ரோ ரெயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.

போராட்ங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட தடையுத்தரவினால் நிலைமை மேலும் விபரீதமாகியள்ளதாகவும், ஹங்காங்கில் வரலாறு காணாத வன்முறைகள் வெடித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.