உலகம்

கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உலகப் பொருளாதாரம் மந்தநிலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது என சர்வதேச பண நிதியத்தின் தலைமையகம் எச்சரித்துள்ளது. நிதியத்தின் பொது இயக்குனர் கிறிஸ்டலினா ஜியார்ஜிவா இது தொடர்பில் ஆற்றிய உரையொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உலகளாவிய ரீதியில், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையப் போவதாக கணிக்கிறேன்.

அமெரிக்கா, ஜப்பான் முதலான பொருளாதார வளர்ச்சி கண்ட நாடுகள் இந்த பொருளாதார மந்தநிலையை இயல்பாகச் சந்தித்தாலும், இந்தியா போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக இருக்கும். இந் நாடுகளில் பொருளாதார மந்த நிலை கடுமையாக இருக்கும். அமெரிக்க சீன வர்த்தப்போர் காரணமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகமும் குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் சந்திக்கவுள்ள இந்தப் பொருளாதார மந்த நிலையைத் தவிர்ப்பதற்குரிய வழிமுறையை கண்டறிய வேண்டும். உலகநாடுகள் ஒன்றிணைந்து வர்த்தக திறனையும், உற்பத்தித் திறனையும்,பெருக்க வேண்டும் எ எனவும் தெரிவித்துள்ளார்.