உலகம்

ஜப்பானில் 100 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிக மோசமான புயல் ஒன்று தாக்கவுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது.

ஹபிகிஸ் எனப் பெயரிடப் பட்டுள்ள இப்புயல் தலைநகர் டோக்கியோ மற்றும் அதன் சுற்றுப் புறங்களை நெருங்கியுள்ளது.

இதனால் டோக்கியோவின் வானம் மிக அரிதான வகையில் பிங் மற்றும் ஊதா நிறத்தில் காணப் படுகின்றது. இதனால் பேரழிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் ஆழ்ந்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிக வேகமாக முடுக்கி விடப் பட்டுள்ளது.

ஏற்கனவே ஜப்பானில் கனமழை மற்றும் சூறைக்காற்றினால் பெரும் சேதம் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஹபிகிஸ் புயல் டோக்கியோவை நெருங்கும் போது மணிக்கு 226 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஊதா நிறத்தில் வானம் தென்படுவது பெரும் மோசமான புயலின் அறிகுறியே என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50 இலட்சம் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மறுபுறம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் மீண்டும் ஒருமுறை மிகத் தீவிரமான காட்டுத்தீ பரவி வருகின்றது. இதனால் 7000 ஏக்கர் நிலப்பரப்பு ஏற்கனவே எரிந்துள்ளது. பல்லாயிரக் கணக்கான மக்கள் வெளியேற்றப் பட்டு வருகின்றனர்.

காட்டுத்தீயின் தீவிர கரும்புகை காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் உட்பட கலிபோர்னியாவின் பல பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டும், போக்குவரத்து பாதிக்கப் பட்டும் உள்ளது. தீயை அணைக்க ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். காட்டுத் தீக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கைக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மென்டிஸ் சற்று முன்னர் (இன்று ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் கட்சி சார் பதவிகளில் இருந்து விலகுவதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் மீண்டும் ஒரு முறை பன்றிகளிடம் இருந்து மனிதர்களிடையே பரவும் புதிய வகை வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாகவும், இதுவும் கொரோனா போன்று பரவக் கூடும் என்றும் சமீபத்தில் ஊடங்களிடையே பரபரப்புச் செய்தி வெளியாகி இருந்தது.

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.