உலகம்

நாங்கள் பாதுகாப்புக் காவலாளிகளோ முகவர்களோ அல்ல. குர்தீஸ்கள் தங்களைத் தாங்களே பாது காத்துக் கொள்வார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களுக்கான பதிலளிப்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிரியாவில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதற்காகத் தொடுத்த தாக்குதல்களுக்கு, , வடக்குப் பகுதியில் இருந்த குர்தீஸ் போராளிகளின் உதவியைப் பெற்றிருந்தன. அமெரிக்கப் படைகள் விலகிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, குர்தீஸ் போராளிகள் மீது தாக்குதல் நடத்துவதாக துருக்கி நடத்திய தாக்குதல்களில், நான்கு இலட்சத்துக்கும் அதிகமாக குர்தீஸ்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகளால் சிரியாவிலிருந்து அமெரிக்கப்படடைகள் திரும்பப் பெற்ற நடவடிக்கையில் கடுமையான விமர்சனங்க எழுந்தன. இவைதொடர்பான செய்தியாளர் சந்திப்பில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், துருக்கி-சிரியா எங்கள் எல்லை அல்ல, அதற்காக எங்கள் வீரர்களின் உயிர்கள் இழக்க முடியாது. குர்திஷ்கள் தனிநாடுகேட்டு போராடும் ஒரு கிளர்ச்சிக் குழு. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் இந்தக் கருத்துக்கள் குர்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்துள்ள நிலையில், பாதுகாப்பு வலயத்திலிருந்து குர்தீஸ் போராளிகள் விலகினால் மட்டுமே போரை நிறுத்திக் கொள்ள முடியும் என துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.