உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப் பட்டுள்ளதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

சில வருடங்களாக சர்ச்சையில் இருந்து வரும் இந்த பிரெக்ஸிட் விவகாரத்தில் உரிய தீர்வை எட்ட முடியாத காரணத்தினால் தான் முன்னால் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதை அடுத்து அண்மையில் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் பதவியேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் இந்த பிரெக்ஸிட் விவகாரத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் பெல்ஜியம் தலைநகர் புருஸ்ஸெல்ஸில் இவ்விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் புதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப் பட்டுள்ளதாக போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் கணக்கில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த டுவிட்டர் அறிவிப்பில் கட்டுப்பாட்டைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் ஒரு புதிய ஒப்பந்தம் தமக்குக் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் சனிக்கிழமை பிரிட்டன் பாராளுமன்றம் கூட்டப் படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிபர் ஜீன் கிளாட் ஜங்கர் உம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ' அண்மையில் புருஸ்ஸெல்ஸில் எட்டப் பட்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான நியாயமான, ஒழுங்கமைக்கப் பட்ட ஒப்பந்தமாகும். இதன் மூலம் தீர்வுகளைப் பெறுவதற்கான உறுதிப்பாடு எட்டப் பட்டுள்ளது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளிக்கப் பரிந்துரைக்கின்றேன்.' என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் 297 பேர் கொரோனா வைரஸ் தொற்றோடு அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

“சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பொருளாத பாதிப்பு கொரோனா நோய்த்தொற்று நேருக்கடியால் இதுவரை இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக ரிசர்வு வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பால் மராட்டிய மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டில் அதிக பாதிப்பை கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா உறுதி ஆனது.

சுமார் $23.11 பில்லியன் டாலர் பெறுமதியான Stealth aircraft எனப்படும் நவீன 105 F-35 ரக போர் விமானங்களை ஜப்பானுக்கு விற்க உடன்பட்டிருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

நேபாளத்தின் சமீப நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது. இக்கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் அடங்கலாக 12 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 19 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.